திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கிராமத்தில் திமுகவினர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடுகாட்டு மைதானத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 புள்ளி 24 ஏக்கர் கொண்ட இடுகாட்டு மைதானத்தை திமுகவினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் இடுகாட்டிற்கு செல்லும் பாதையில் மக்கள் குப்பைகளை கொட்டி வருவதால் அப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினரிடம் பல முறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, திமுகவினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடுகாட்டை மீட்டுத் தர வேண்டும் என்று அவர்கள் கோரிகை விடுத்துள்ளனர்.
Discussion about this post