கோவை விமான நிலையம் செல்லும் வழியில் இரும்பு கம்பிகளால் திமுக கொடிகளை, கட்சி நிர்வாகிகள் ஆபத்தான வகையில் நட்டு வைத்திருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் பிளக்ஸ் பேனரை சாலையில் வைக்கக்கூடாது கொடிகளையும் வைக்க கூடாது என அறிவுரை வழங்கியுள்ளது. இந்த நிலையில், கோவையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்பதால், திமுக கட்சி நிர்வாகிகள் விமானநிலையம் செல்லும் வழியில் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட இரும்பு கம்பிகளை கொண்டு கட்சி கொடியை பறக்க விட்டுள்ளனர். இந்த இரும்பு கம்பிகள் சிறிதளவு சாய்ந்தாலே இருசக்கர வாகன ஓட்டிகள் மீது பட்டு விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதில் உயிர்ப்பலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆனால், இதை எல்லாம் பொருட்படுத்தாமல் திமுகவினர் கொடி கம்பங்களை நட்டு வைத்துள்ளனர். சமூக நலனில் அக்கறை இல்லாமலும், பொது மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமலும், திமுகவினர் தொடர்ந்து அட்டூழியங்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post