வெற்று அறிவிப்புகளை கூறி திமுக, காங்கிரஸ் மக்களை குழப்பி ஏமாற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து பெருந்துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மோடி மீண்டும் பிரதமராக வந்தால் தான், மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்றார். அதிமுக தலைமையில் அமைந்துள்ளது மக்கள் செல்வாக்குள்ள கூட்டணி என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்த போது, தனது குடும்பத்தின் நலனை மட்டுமே ஸ்டாலின் கருத்தில் கொண்டு செயல்பட்டதாக முதல்வர் குற்றம்சாட்டினார். தமிழகத்தின் நலனுக்காக திமுக, காங்கிரஸ் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றார்.
Discussion about this post