தோல்வி பயத்தால் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக திமுகவினர் விரகத்தியில் கூறிவருதாக, வேலூர் நாடாளுமன்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துரைமுருகன் குடும்பத்தினர், எந்தெந்த வார்டுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என ஒவ்வொரு பண்டலாக பிரித்து கொடுக்க முயன்றது, அனைத்து தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post