தேர்தல் நெருங்க நெருங்க திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு பித்தம் தலைக்கேறும் என்றும் கூட்டணிக்காக ஒருவர் தனிப்பட்ட முறையில் நம்பி பேசியதை வெளியில் சொல்வது அநாகரிகம் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை ரயில்பாதை திட்டம் குறித்து போதிய புரிதல் இல்லாமல், ஸ்டாலின் பேசுவதாகவும், ஒரு விஷயத்தைப் பற்றி தெரியாமல், அது பற்றி பேசுவது அடி முட்டாள் தனமாக இருக்கும் என்றும் விமர்சித்துள்ளார்.
Discussion about this post