தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை

25-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் புதிய உச்சத்தை எட்டியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதற்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.

அதன்படி 25-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் குறைந்து 80 ரூபாய் 73 காசுகளுக்கும், டீசல் விலை 13 காசுகள் குறைந்து லிட்டர் 76 ரூபாய் 59 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Exit mobile version