வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், மேலும் அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2018 – 19ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை சமர்ப்பிக்க ஜூலை 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. பின்னர், இதனை ஆகஸ்ட் 31ம் தேதியாக நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்தது. வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதமாக செலுத்த நேரிடும் என்றும், வட்டி அபராதம் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும் என்றும் கூறப்பட்டது.
இந்தநிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளாதாக வெளியான செய்தியை வருமான வரித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மேலும் காலஅவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் ஆகஸ்ட் 31ம் தேதியே கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளது.