கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ் நாள் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். பெரும் சர்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ் நாள் தடை விதித்தது. இதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் ஸ்ரீசாந்தின் வாழ் நாள் தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், 35 வயதான ஸ்ரீசாந்தின் வாழ் நாள் தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுபரிசீலனை செய்து 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Discussion about this post