கோழி தீவனமாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படும் மக்காச் சோளம்

தேனி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிர் விளைச்சலில் கிடைக்கும் கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஏராளமான கோழிப்பண்ணைகள் உள்ளன. புரதச்சத்து அதிகம் உள்ள இந்த மக்காச்சோளம் தமிழகத்தில் கோழி தீவனமாகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு மக்காச்சோளம் விளைச்சல் அமோகமாக உள்ளது. கடந்தாண்டை விட மக்காச்சோளத்துக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version