2-ம் கட்ட ரயில் தடத்தை அமைக்க ஜூன் மாதம் ஒப்பந்தம் கோரப்படும் – மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர்

2-ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கான ஒப்பந்தம் ஜூன் மாதம் கோரப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.

சென்னை, டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையேயான வழித்தடத்தில் விரைவில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து, மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆய்விற்கு பிறகு, சான்றிதழ் அளிக்கப்பட்ட பின், விரைவில் ரயில் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால், மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணம் செய்ய, 100 சதவீதம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தார். அடுத்த கட்டமாக, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம் முதல் கோயம்பேடு ஆகிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தங்களை, வரும் ஜூன் மாதத்தில் கோர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version