காங்கிரஸ் கட்சி ஊழல் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
பா.ஜ.க. வணிகர் தாமரை மாநில மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,காங்கிரஸ் கொடுத்த 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்தில் பா.ஜ.க. தந்திருப்பதாக கூறினார்.
ஊழல் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டு, காங்கிரஸ் கட்சி ஒன்றும் தெரியாததுபோல அமைதியாக இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறார் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் கடன் 3 மடங்கு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வங்கியில் கடன் பெற்று ஓடியவர்களின் சொத்தை பறிமுதல் செய்யவும், அவர்களை இந்தியாவுக்கு கொண்டுவரவும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதம் என்றும்,இதனை 8 சதவீதமாக அதிகரிப்பதற்கு பிரதமர் மோடி முயற்சி எடுத்து வருகிறார் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post