திமுகவினர் வீட்டில் இறைவனை வழிபடுவதாகவும், பொதுவெளியில் கடவுளை நிந்தனை செய்வதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பணிமனையை அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், துரைமுருகன் வீட்டில் எடுக்கப்பட்ட பணம் மூலம், அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்ற திமுகவின் எண்ணத்திற்கு மூடுவிழா செய்யப்பட்டுள்ளது என்றார். திமுகவினர் வீட்டில் இறைவனை வழிபடுவதாகவும், பொதுவெளியில் கடவுளை நிந்தனை செய்வதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post