கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து, பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏறபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 4.30 மணியளவில், சென்னை, மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
Discussion about this post