உண்மையான பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு மத்திய பாஜக அரசு மக்களை ஏமாற்றி வருவதாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விவசாயிகள் விவகாரம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மத்திய அரசு கண்டுக்கொள்வதில்லை என்றார். அதேசமயம் ராமர் கோயிலுக்காக சண்டையிட்டுக்கொண்டு மக்களை மத்திய பா.ஜ.க அரசு ஏமாற்றுவதாக குற்றம்சாட்டிய பாரூக் அப்துல்லா, காஷ்மீரையும் சிதைத்து வருவதாக வேதனை தெரிவித்தார்.
காஷ்மீரி முஸ்லீம்களை பாகிஸ்தானி என கருதுகின்றீர்களா என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பிய அவர், ஏன் அவர்களை பாகிஸ்தானுக்குள் தள்ளுகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
Discussion about this post