சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஓமலூர் அருகேயுள்ள பல்பாக்கி கிராமத்தில் உள்ள ஓங்காளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தை மாதத்தில் தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான தேரோட்ட விழா கடந்த 21-ம் தேதி சக்தி சாட்டுதலுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து நாளுக்குநாள், சக்தி கரகம், சாமி ஊர்வலம், கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தினை ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
Discussion about this post