அமமுக கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பொது மக்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உலகம் பட்டியில் அமமுக கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பொது மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அமமுக கட்சியின் எஸ்.புதூர் ஒன்றிய துணைச் செயலாளர் முத்துசாமியிடமிருந்து பட்டுவாடா செய்ய வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை சிங்கம்புணரி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.
Discussion about this post