கொல்கத்தா காவல் ஆணையர் சி.பி.ஐ முன் ஆஜராக உத்தரவு-உச்ச நீதிமன்றம்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர், சிபிஐ முன்பு ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்காக கொல்கத்தா காவல் ஆணையர் ஒத்துழைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கை, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் முறையாக விசாரிக்கவில்லை என்று சிபிஐ குற்றம் சாட்டியிருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக காவல்துறை உயரதிகாரிகள் செயல்பட்டதாகவும், இது சம்மந்தமாக பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, சிபிஐ முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகும் காவல் ஆணையரை விசாரிக்கலாம், ஆனால் கைது செய்யக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version