நெல்லை அருகே பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஊரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்களான முருகன் மற்றும் மாரியப்பன், சுந்தரபாண்டியபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அத்தியூத்து கீழபுறம் பகுதியில், எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த மாரியப்பனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மாரியப்பன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குலதெய்வ கோவிலுக்கு வழிபாட்டிற்காக சென்ற கட்டட தொழிலாளர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம், அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post