சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் காண்போரை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
மதகுபட்டி ஸ்ரீ பூங்குன்ற அய்யனார் கோயிலில் வைகாசி பால்குட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 16 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், பெரிய மாட்டு பிரிவில் 6 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு பிரிவில் 10 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.
பெரிய மாட்டிற்கு 10 மைல் தூரமும், சின்ன மாட்டிற்கு 8 மைல் தூரமும் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் பேட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Discussion about this post