2019-20ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணியை மத்திய அமைச்சர்கள் அல்வா கிண்டி தொடங்கி வைத்தனர்.
ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக மத்திய அமைச்சர்கள் அல்வா கிண்டி அனைவருக்கும் பரிமாறுவது வழக்கம். அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் ஷிவ் பிரதாப் சுக்லா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய பட்ஜெட் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தனர். முன்னதாக அல்வா கிண்டி அனைவருக்கும் பரிமாறினர்.
Discussion about this post