சிதம்பரம் அருகேயுள்ள கொத்தட்டை கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் திருநங்கைகள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் திருநங்கைகள் ஒன்று கூடி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அழகிப் போட்டியும் நடைபெற்றது. இந்த விழாவை நடிகை ரேகா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற அழகி போட்டியில் 15 திருநங்கைகள் பங்கேற்றனர், இதில் பழனியை சேர்ந்த தேன்மொழி மிஸ் கொத்தட்டையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசை தட்டிச் சென்றார்.