பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த 5 ம் தேதி முதல், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவில், தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணைக்கான நீர்வரத்து 1லட்சம் கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 80புள்ளி24 அடியாகவும், நீர் இருப்பு 15புள்ளி 8 டிஎம்சி யாகவும், உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 205 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Discussion about this post