சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பாக வரும் 2 ஆம் தேதி அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று வெளியிடப்பட்டது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களின் வரைவு பட்டியலை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ரிப்பன் மாளிகையில் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்குட்பட்ட 200 வார்டுகளில் மொத்தம் 5,759 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர், வரும் 6 ஆம் தேதி இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.