முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அ.தி.மு.க புறநகர் மாவட்ட அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து மாற்று கட்சியினர் முதலமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் தனது இல்லத்திற்கு வந்த பொதுமக்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
Discussion about this post