அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடித்தால் திமுக துணை தலைவர் துரைமுருகன் கட்சியிலிருந்து பொறுப்பிலிருந்து விலக தயாரா? என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்
சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற ஆட்டோ சங்கத்தின் 15 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்,அப்போது இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஆட்டோ ஓட்டியும், இனிப்புகள் வழங்கியும் சிறப்பித்தார், பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சிக்கு பயந்து நாங்கள் எதுவும் செய்யவில்லை, திமுக தான் கடந்த ஆட்சி காலங்களில் டெல்லியில் காங்கிரஸிடம் அடகு வைத்தது. தற்போது 3 சட்டமன்ற உறுப்பினர்கள் எடுக்கப்படுள்ள நடவடிக்கை ஆதாரப்பூர்வமானது எனவும், அதிமுக ஆட்சி நீடிக்காது என கூறி வரும் திமுகவினரின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை எனவும், மீண்டும் ஆட்சி நீடித்தால் திமுக துணை தலைவர் துரைமுருகன் கட்சியிலிருந்து பொறுப்பிலிருந்து விலக தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்
Discussion about this post