தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மார்ச் 21ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பது குறித்து மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடன் சீர்காழியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், கனமழையால் மயிலாடுதுறை மாவட்டம் பேரிடர் பாதிப்பை பெருமளவு சந்தித்த நிலையில், அரசு அறிவித்த இழப்பீடு தொகை தற்போது வரை கிடைக்காததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பட்ஜெட்டில் வேளாண் விரோத சட்டங்கள் குறித்தும், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் நடவடிக்கை குறித்து எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்தார். மறுக்கும் பட்சத்தில் மார்ச் ஒன்றாம் தேதி கன்னியாகுமரி தொடங்கி டெல்லி நோக்கி விவசாயிகள் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் பிஆர் பாண்டியன் தெரிவித்தார்.
Discussion about this post