2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் 2015ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று துவங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநாடு மற்றும் அதையொட்டி நடைபெறும் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள் பங்கேற்று வருகின்றனர்.
முதல் நாளான இன்று சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் பங்கேற்றார். மேலும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துக் கொண்டார்.
Discussion about this post