மனைவியின் 3 வயது குழந்தையை கொன்ற 2-வது கணவன்

சென்னை பள்ளிகரணை அருகே மனைவியின் மூன்று வயது குழந்தையை, இரண்டாவது கணவன் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தாலப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் கர்நாடகாவை சேர்ந்த கங்கா, கட்டட வேலை செய்த வெங்கடேசன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி கேரளாவில் உள்ள தனது மகளை பார்க்க கங்கா சென்ற போது தொலைபேசியில் அழைத்த வெங்கடேசன், கங்காவின் 3 வயது ஆண் குழந்தை அருண் கீழே விழுந்து மயக்கமடைந்ததாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தார். சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த நிலையில், மரணத்தில் சந்தேகமடைந்த கங்கா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் தலைமறைவாக இருந்த வெங்கடேசனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தை என்பதால் சிறுவனை அடித்து கொலை செய்ததாக அவர் அதிர்ச்சி வாக்கு மூலம் அளித்தார். பின்னர் குழந்தையை கொலை செய்த வழக்கில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார்.

Exit mobile version