நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வன பாதுகாவலர்களுக்கான 14 நாட்கள் பயிற்சி துவங்கியுள்ளது.
இந்தியா மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு நிறுவனத்தின் மண்டல ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெறும் இந்த பயிற்சியில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 31 உதவி வன பாதுகாவலர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறவுள்ளனர். இதில், வகுப்பறையில் உள்ள பேரராசிரியர் தலைமையில் 3 நாட்கள் பயிற்சியும்,பின் மாதிரி நீர்பிடி முகடுப் பகுதிகளில் களப் பயிற்சி என இரண்டு வகையாக இந்த பயிற்சி நடைபெறவுள்ளது.இந்த பயிற்சியானது வனப்பகுதியில் மண் மற்றும் நீர்பிடிப்பு கட்டமைப்புகளை விஞ்ஞான பூர்வமாக கட்டுவதற்கு உதவியாக அமையும் என உதகமண்டல ஆராய்ச்சி மையத்தின் முனைவர் மணிவண்ணன் தெரிவித்தார்.