அதிமுக ஆட்சியின்போது வழங்கப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க, உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம், கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த சந்தீப் குமார், சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த பின்னரே முடிவு செய்யப்படும் என்பதால், தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர். மேலும், இவ்வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் மதுரையை சேர்ந்த அபிஷ் குமார் என்பவர் தொடர்ந்த வழக்குடன், இந்த வழக்கையும் இணைத்து நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
Discussion about this post