கோத்தகிரி அளக்கரை நீர் தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஈளாடா தடுப்பணையில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள வார்டுகள் மற்றும் குடியிருப்புகள், காட்டேஜ்களில் குடிநீர் தேவை இருந்து வந்தது. இந்த நிலையில், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கோத்தகிரி பேரூராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் அளக்கரை குடிநீர் திட்டம் வகுக்கப்பட்டு, நாள்தோறும் குடிநீர் கிடைக்கும் வகையில் வகை செய்யப்பட்டுள்ளது. அளக்கரை குடிநீர் திட்டம் வகுக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி கூறி வருகின்றனர்.
Discussion about this post