கடலூரின் முதுநகர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருவதற்கு அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கடலூர் நகராட்சி மற்றும் ROAT என்ற தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து கடலூர் முதுநகர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 16 லட்சம் ரூபாய் செலவில் 5 ஆயிரம் கொள்ளளவு கொண்ட கேன்கள்மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2004ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு முதுநகர் பகுதி மக்கள் உப்பு தன்மை கொண்ட நீரையே பயன்படுத்திவந்த நிலையில், தமிழக அரசு ஏற்படுத்தித் தந்துள்ள இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
Discussion about this post