புவியியல் ஆய்வாளர்களின் தவிர்க்க இயலாத இடமான அரியலூரில் புதைபடிவ அருங்காட்சியகம் அமைத்துக் கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வறட்சி மாவட்டங்களில் ஒன்றாக இருக்கும் அரியலூர் மாவட்டம் உலக புவியியல் வரைபடத்தில் இடம் பெற்றிருக்கிறது.146 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தின் பெரும்பகுதி கடலாக இருந்துள்ளது என புவியியலாளர்கள் கூறுகின்றனர். இதற்கு அரியலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சான்றுகள் கிடைக்கின்றன.
மனித நடமாட்டம் இல்லாத சமயத்தில் கடலில் ஏற்பட்ட பேரலைகளால் 81 மில்லியன் ஆண்டுகள் அரியலூர் மாவட்ட பகுதி கடலில் மூழ்கியிருந்தது என்கிறார்கள்.பின்னர் கடல் உள்வாங்கிய போது ஆழ்கடலில் வாழ்ந்த பல்வேறு வகை கடல்வாழ் உயிரினங்கள் இறந்துள்ளன.
Discussion about this post