கட்டுப்பாட்டு பகுதி இல்லாத மண்டலமாக தண்டையார்பேட்டை திகழ்வதாக அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் களபணியாளர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வில் அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருவதாகவும், அதிகளவில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் தற்போது தனிமைபடுத்தப்பட்ட பகுதி எதுவும் இல்லை எனவும், கொரோனா பாதிப்பில் இரண்டாம் அலை வீசிவிடக்கூடாது என மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post