தமிழ் திரைத்துறையின் பாராட்டிற்குரிய நடிகை மற்றும் முன்னாள் மறைந்த முதலமைச்சரான ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்குனர் விஜய் உருவாக்கி கொண்டிருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இரண்டு தோற்றத்தில் நடிக்கிறார்.ஒன்று ஜெயலலிதாவின் இளமை பருவம்,இன்னொன்று ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவர் பச்சை நிற புடவையில் தோற்றமளிப்பதாகும்.
மேலும்,தலைவி படத்தில் பாகுபலி திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் பணியாற்றி வருவதால் கதை மிகவும் சுவாரஸ்யமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த படத்தின் first look poster-ஐ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில் கங்கனா ரனாவத் பச்சை நிற புடவையில் இரட்டை இலை சின்னத்தை கையில் காட்டுவது போல் அமைந்துள்ளது.இந்த படம் அடுத்த ஆண்டு ஜுன் 26ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.