தலைவாசல் கால்நடை பூங்கா மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்: துணை முதல்வர்

தலைவாசலில் அமையவுள்ள கால்நடைப் பூங்கா சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சேலம் தலைவாசலில் நடைபெற்ற கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய துணை முதலமைச்சர், கடந்த ஆண்டுகளில், 4 ஆயிரத்து 554 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கால்நடைத்துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசின் சார்பில் 87 ஆயிரத்து 744 மகளிருக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டதாகவும், அவை இனவிருத்தி அடைந்ததன் மூலம், 1 லட்சத்து 76 ஆயிரத்து 153 கன்றுகளை ஈன்றுள்ளதாகவும், இதனால் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது எனவும் கூறினார்.

மேலும், 40 லட்சத்து 88 ஆயிரம் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கப்பட்டதில், அவை 3 கோடி ஆடுகளாக இனப்பெருக்க விருத்தி அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

Exit mobile version