தமிழகத்தில் பொங்கல் தொகுப்பில் ஆயிரத்து 296 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதுடன், கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு மீண்டும் ஊட்டச்சத்து பெட்டக டெண்டர் வழங்கி,ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக திகழும் திமுக எனும் திராவிட மாடல் அரசு, ஊழல் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கே ஊட்டச்சத்து பெட்டக டெண்டரை வழங்கிய திமுக அரசு, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 21 பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்பட்ட பொருட்கள் குறித்து எழுந்த சர்ச்சை இன்னும் அடங்கவில்லை. அப்படி என்ன நடந்தது என்றால் அரிசியில் வண்டு, புளுத்துப்போன பருப்பு, உருகிய வெல்லம், கருகிய கரும்பு, புளியில் பல்லி என மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். புளியில் பல்லி இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய திருத்தணி நந்தன் மீது போடப்பட்ட பொய் வழக்கால், அவரது மகன் ஐடி நிறுவன ஊழியர் குப்புசாமி, மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் ஆயிரத்து 296 கோடி ரூபாய் முறைகேடு செய்தது அம்பலமான நிலையில் தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனாலும், முறைகேட்டில் ஈடுபட்டு கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட அதே நிறுவனத்திற்கே, கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கக்கூடிய ஊட்டச்சத்து பெட்டகத்திற்கான ஹெல்த் மிக்ஸ், தாய் சேய் நல பெட்டகத்திற்கான ஊட்டச்சத்து பெட்டக ஒப்பந்தத்தை தற்போது விடியா அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மோசடி செய்த நிறுவனத்திற்கு திமுக அரசு எந்த ஆதாயத்திற்காக மீண்டும் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குழந்தை பிறப்பு மற்றும் 10 மாத கரு சுமத்தல் என்பது மிகப்பெரிய வரம் என்பதை உணர்ந்து தான், புரட்சித்தலைவி ஜெயலலிதா மற்றும் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோரால் அர்ப்பணிப்போடு தரமான பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் ஊழல் நிறுவனத்திற்கே டெண்டர் வழங்கும் விடியா திமுக அரசு, அடுத்த தலைமுறையை உருவாக்கும் கர்ப்பிணி பெண்களின் நலனில் அக்கறை இல்லாமல் போனது ஏன்? என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.