நேற்று வெளியான ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாளில் 98 சதவீத தேர்வர்கள் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கணினி வழியில் ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் நடைபெற்றது. 6 ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் வகுப்புகளை எடுப்பதற்கான ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களை பணிக்கு எடுப்பது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கையாகும். அதன்படி நடைபெற்று முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளின் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் 4 லட்சத்து ஆயிரத்து 886 பேர் தேர்வு எழுதி இருந்த நிலையில், இரண்டு விழுக்காட்டினர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதில் 98 சதவீதம் பேர் தோல்வி அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.