2011 ஆம் அண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், 2011 ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும் தகுதித் தேர்வு கட்டாயமல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இந்த தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.