காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்பு, காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதியில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவசர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, தீவிரவாதிகளின் சதிதிட்டத்தை முறியடிக்கும் வகையில் கூடுதலாக ராணுவ வீரர்களை காஷ்மீருக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஏற்கனவே 60 ஆயிரம் வீரர்கள் தீவிரவாதத்துக்கு எதிரான பாதுகாப்பு பணியிலும், 20 ஆயிரம் பேர் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ள நிலையில் கூடுதலாக 10 ஆயிரம் பேர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.