இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, இன்று நடக்க இருந்த மே தின கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலில், 11 இந்தியர்கள் உட்பட 253 உயிரிழந்தனர். உலகம் முழுவதும் சோக அலைகளை ஏற்படுத்திய இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாகவும், மக்களின் பாதுகாப்பு நலன் கருதியும் மே தின கொண்டாட்டங்களை தவிர்க்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இன்று சில கட்சி தலைவர்கள், குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளனர்.