வழக்கமா கோடை காலத்துலயே நீர் வழித்தடங்கள தூர் வாருறது, மழை நீர் கால்வாய்கள்ல அடைப்புகள சரிசெய்றதுன்னு பணிகள செஞ்சத்தான், அடுத்து வரக்குடிய மழைக்காலங்கள்ல தண்ணி தேங்காம ஓடும்.. இப்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்கள்ள உள்ள அடையாறு, கூவம், கொசஸ்தலை, ஆரணியாறு, வெள்ளாறு, கொள்ளிடம், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்கள 103 இடங்கள்ல மழைக்கு முன்னாடியே தூர் வாருவதற்காக, நடப்பாண்டுல மே 18ஆம் தேதியே 20 கோடி ரூபாய் நீர்வளத்துறைக்கு வழங்கப்பட்டிருக்காம்…
ஆனா இன்னமும் வேலைக்கான டெண்டர விடலையாம்… இந்த பணிய பொறுத்தவரைக்கும் பொறியாளர் தொடங்கி துறையோட முக்கியப்புள்ளி, அவரு இவருன்னு 40 சதவீதம் கமிஷனே கைமாறுமாம்.. அதுமட்டுமில்லாம இந்த டெண்டர தங்களோட ஆதரவு நிறுவனங்களுக்குத்தான் தரணும்னு சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், மண்டல குழு தலைவர்கள், வார்டு மெம்பர்கள்… ஏன்… எம்.எல்.ஏக்கள் வரைக்கும் பரிந்துரைக்கிறாங்களாம்… இதுல யாரு சரியான கமிஷன் தருவாங்கன்னு பார்த்து டெண்டர் கொடுக்கலாம்னு திமுக அதிகார மையம் வெயிட்பண்ணுதாம்… போனவருஷம்லாம் மழையில என்ன பாடு பட்டாங்க சென்னை மக்கள்… அது தெரிஞ்சும் இன்னமும் கமிஷனுக்காக பணிகள தொடங்காம இருக்கிறதுதான் திராவிட மாடல் அரசு மக்கள் நலன பாதுகாக்குற லட்சணமான்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.