இலங்கையில் நடைபெற்ற அதிபயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக 10 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தேவாலயங்கள் மற்றும் விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் பெரும்பாலனவை தற்கொலைப்படை தாக்குதல் என கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், மாலத்தீவு நாடுகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை சங்கிரீலா ஹோட்டலில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக இலங்கையை சேர்ந்த அடிப்படைவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர். தாக்குதல் தொடர்பான விசாரணை ரகசியமான முறையில் நடைபெற்று வருவதாகவும், வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அந்நாட்டு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உயிரிழந்த 262 பேரில், 33 பேர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகாத நிலையில், பதட்டமான சூழல் தொடர்ந்து நீடிக்கிறது. நிலைமை சீராகும் வரை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.