இலங்கையில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: உளவுத்துறை எச்சரிக்கை

இலங்கையில் வரும் திங்கள் கிழமை மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈஸ்டர் பண்டிகையன்று இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்நாடு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. வருகின்ற திங்கள் கிழமை முதல் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அதே தினம் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக இலங்கை உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் அந்நாட்டுல் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை ஒழித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ராஜபக்சே உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version