மதுரை மாவட்டம் சூரைக்குண்டு கிராமத்தில் உள்ள சின்னடக்கி அம்மன் கோவிலில் கிடா வெட்டி, ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த விழாவில் சுமார் ஆயிரம் பெண்கள் கிராம மந்தையில் இருந்து பொங்கல் பானைகளை தலையில் சுமந்தப் படி ஊர்வலமாக சென்றனர். கோவிலை சென்றடைந்த பெண்கள் பொங்கல் வைத்தும், 200க்கும் மேற்பட்ட கிடாய்களை பலியிட்டும் வழிபடு நடத்தினர். மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வேண்டி நடைபெற்ற இந்த விழாவில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Discussion about this post