கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே 500 ஆண்டுகள் பழமையான அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புவனகிரி அருகே மதுவானைமேடு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான புஷ்கலை சமேத அய்யனார் கோயில் ஊர்மக்களால் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.