சென்னை மண்ணடி மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, 63 நாயன்மார்களுடன், அம்பாள் திருவீதி உலா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மன்னடி லிங்கி செட்டி தெருவில் உள்ள திருக்கோவிலில், பங்குனி திருவிழாவை முன்னிட்டு, கடந்த வாரம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. ஐந்தாம் நாளான இன்று, அம்பாள் வெள்ளி தங்க ரிஷப வாகனத்தில் 63 உற்சவ நாயன்மார்கள் எதிர்சேவை வீதி உலா நடைபெற்றது. மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர், முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீதி உலா வந்தனர். அப்போது, 63 நாயன்மார்களும் ஒரே வரிசையாக பல்லக்கில் எழுந்தருளி, பின்னோக்கி சென்றவாறு எதிர் சேவை புரிந்தனர். இந்த நிகழ்வில், மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கைகள் மற்றும் கலை கூத்துக்கள் நடைபெற்றன.