தெலுங்கானா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையில் இலவச ஆடு,கோழி,தாலிக்கு தங்கம் போன்ற கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தெலங்கானாவில் டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே அமாநில பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப், 7 முதல் 10 வரைப்படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள்கள், பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு 50 சதவித மானியத்துடன் ஸ்கூட்டி வழங்கும் திட்டம் போன்றவை இடம் பெற்றுள்ளன. மேலும் இலவச ஆடுகள், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கு இலவச பசு மாடுகள் வழங்கப்படும் போன்ற திட்டங்களும் இடம்பெற்றுள்ளன
Discussion about this post