சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், ஏவுவதற்கான தொழிற்நுட்ப ஒத்திகை நிறைவடைந்துள்ளது.
நிலவை ஆய்வு செய்ய சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ தயாரித்து வந்தது. நிலவின் தென் துருவ பகுதியை உலகில் முதன் முறையாக, ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், சந்திராயன் 2 விண்கலம், அறிவித்தப்படி கடந்த 15ந்தேதி அதிகாலை 2:51க்கு விண்ணில் செலுத்தும் வகையில், கவுன்டவுன் தொடங்கியது. இந்நிலையில் திடீரென்று கடைசி நேரத்தில் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விண்கலத்தை விண்ணில் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான தொழிற்நுட்ப ஒத்திகைகள் ஜூலை 20ம் தேதி இரவு வெற்றிகரமான நடத்தப்பட்டது. இதையடுத்து திட்டமிட்டப்படி ஜூலை 22ம் தேதி பிற்பகல் 2.43 மணி சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும்.
Discussion about this post