நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வி அடைந்ததால், இந்திய அணி தொடரை இழந்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இதனால் ரன் குவிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. பின்னர் வந்த ஷர்தூல் தாகூர், நவ்தீப் சைனி ஆகியோருடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சிதறிடித்த இவர்கள் வெற்றிக்காக போராடினர்.
சைனி 45 ரன்களுக்கும், ரவீந்திர ஜடேஜா 55 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் கைப்பற்றியது.